நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம் மலேசியாவில்; அடிப்படை பட்டக்கல்வி பொறியியலில். பின்னர், அனைத்துலக பொருளியல், அரசியல் ஆகிய துறைகளில் முதுகலையை முடித்துவிட்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக முழு நேர சமூகப் பணியாளராக சேவையாற்றி வருகின்றேன். சமூக செயல்முனைப்பு நடுவம் என்ற பொதுநல அமைப்பின் தலைவராக உள்ளேன்.

தகவல் நுட்பியலின் முக்கியத்துமும், அதன் அறிவு ஒருத்தருக்குக் கொடுக்கும் பலனையும் நன்குணர்ந்துள்ளேன். இவற்றைச் சக தமிழர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் (வெறியில் என்றாலும் அது மிகையாகா), 2001-2004ல் மென்பொருள் தமிழாக்க முயற்சியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். விளைவு: மொஜில்லா 1.6, ஒபன் ஆபீஸ் 1.1, 7-ஜிப், ட்க்ஸ் பெய்ண்ட் போன்ற மென்பொருள்கள் நானும் நண்பர் முகுந்தராஜும் ஏற்று நடத்திய தமிழா குழுவினரால் வெளியிடப்பட்டது. என்ன ... எதிர்பார்த்த வரவேற்புதான் கிடைக்கவில்லை.

ஏறக்குறைய ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இப்பக்கம் எட்டிப்பார்கின்றேன். நிலை பலவிதத்தில் மாறுபட்டுள்ளது போல் தெரிகின்றது. தவிர்த்து, மலேசியவிலுள்ள இரண்டு தமிழ்ப்பள்ளிகளில் கணினிக்கூடங்கள் அமைக்கும் பணியில் நான் இவ்வாண்டு ஈடுபட்டுள்ளேன். Thin-Client நுட்பியலைப் பயன்படுத்தி இக்கூடங்களை அமைக்க எண்ணியுள்ளோம். எடுபுண்டு அதற்கு ஏற்றத் தீர்வைக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.

பார்போம்...

User information

Launchpad Id:
tamiliam
Email:
Log in for email information.

Member since:
2009-01-17
Icon of Ubuntu Local Community Teams
Languages:
English (United Kingdom), Malay, Tamil
Time zone:
Asia/Kuala_Lumpur (UTC+0800)
Karma:
0 Karma help

All memberships Latest memberships

Joined
Joined